முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான ‘ஒரு பதவி, ஒரு
ஓய்வூதியம்’ திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி
14–ந்தேதி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள்
ராணுவத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில்
போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்த பிரச்சினையை ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்
தொடர்ச்சியாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்க உள்ளதாகவும் முன்னாள்
ராணுவத்தினர் தெரிவித்து இருந்தனர். நேற்று டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில்
முன்னாள் ராணுவத்தினர் 55 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
அப்போது
பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி அனில் கவுல், ‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இன்று (நேற்று) தொடங்கியுள்ள தொடர் உண்ணாவிரத போராட்டம் எங்களது கோரிக்கை
நிறைவேறும் வரை தொடரும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.







