ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு:

Five year Integrated B.A And BL Rank List 2015-2016-Click Here
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் பல்கலைக்கழக இணையதளத்திலும் மாணவர்கள் காணலாம்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள், மூன்றாண்டு சட்டப் படிப்புகள், அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.
 இதில் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.-எல்.எல்.பி, பி.காம்.-எல்.எல்.பி, பி.சி.ஏ.-எல்.எல்.பி, பி.பி.ஏ.-எல்.எல்.பி. படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 22-ஆம் தேதியோடு நிறைவுபெற்றது.
 இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. மாணவர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையிலும் இந்தப் பட்டியல் ஒட்டப்பட்டது.
 தரவரிசைப் பட்டியலை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் விண்ணப்பதாரர்கள் காணலாம் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 விண்ணப்ப விநியோகம் நிறுத்தம்: சட்டப் படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு சர்ச்சை காரணமாக, இம்முறை படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தாமதமானது.
 இந்த நிலையில், மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கியும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை 21-ஆக உயர்த்தியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
 இந்த நிலையில், வயது உச்ச வரம்பு தளர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 18-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இதனால், மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.
 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H