அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும், இல்லையெனில் ஊழியர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்து
உள்ளது.
அரசு அலுவலகங்களில் காலம் தவறாமையை உறுதிசெய்ய அனைத்து மத்திய அரசு அமைச்சரவைக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் எழுதிஉள்ளது. “வழக்கமாக அலுவலகத்திற்கு காலதாமதமாக வருவது அரசு ஊழியர்களுக்கு சரியானதா என்று பார்க்கப்படும், இதுபோன்ற அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அனைத்து தரப்பிலும் உள்ள அரசுஊழியர்களிடமும் காலம் தவறாமையான வருகைப்பதிவேடு கவனிக்கப்படும்,” என்று மத்திய அரசு ஊழியர்கள் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு ஊழியர்களால் கடைபிடிக்க வேண்டிய காலம் தவறாமையின் அவசியம் தொடர்பாக
தேவைப்படும் போது எல்லாம் குறிப்புகள் அவ்வபோது அனுப்பப்படும். “ஊழியர்கள்
காலம் தவறாமையை உறுதிசெய்வது என்பது அமைச்சகங்கள், துறை மற்றும் அரசு
அலுவலங்களைளின் பொறுப்பாகும்,” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசு
அலுவலங்களில் கைமுறை பயன்பாட்டை தவிர்க்க மத்திய அரசு ஆதார் கார்டுடன்
இணைப்புக் கொண்ட பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஏடு(AEBAS) முறையை அரசு
அலுவலங்களில் கொண்டு வந்துஉள்ளது. ஏ.இ.பி.ஏ.எஸ். முறையானது காலம் தவறாமையை
உறுதிசெய்ய அமைச்சகங்கள் மற்றும் அலுவலங்களில் செயல்பாட்டுக்கு
கொண்டுவரப்படும். என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தரப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் காலம் தவறாமையை உறுதிசெய்ய அனைத்து மத்திய அரசு அமைச்சரவைக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் எழுதிஉள்ளது. “வழக்கமாக அலுவலகத்திற்கு காலதாமதமாக வருவது அரசு ஊழியர்களுக்கு சரியானதா என்று பார்க்கப்படும், இதுபோன்ற அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அனைத்து தரப்பிலும் உள்ள அரசுஊழியர்களிடமும் காலம் தவறாமையான வருகைப்பதிவேடு கவனிக்கப்படும்,” என்று மத்திய அரசு ஊழியர்கள் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்கள் விவரங்களை நாள்படி கொடுக்க www.attendance.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துஉள்ளது. இணையதள தகவலின்படி 1,29,895 ஊழியர்கள் பதிவுசெய்து உள்ளனர். இதில் இன்று 62,761 பேர் வந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஏடு முறையானது வருகைப்பதிவை குறிப்பிடவே மட்டுமே தவிர அலுவலக நேரம் மற்றும் காலதாமதமான வருகைப்பதிவு தொடர்பான வழிமுறைகளில் எந்தஒரு மாற்றும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருதல் என்பது மாதத்திற்கு இரண்டு முறை அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சரியான காரணம் அலுவலகத்தில் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் ஏற்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.







