தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் விநியோகம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் விநியோகம்:

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே விலை இல்லா பாடப் புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சில தனியார் பள்ளிகள் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன.
விடுமுறை நாட்களில் சொந்த ஊர், உறவினர் ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்த மாணவ-மாணவிகள் நேற்று ஆர்வத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.
பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளிக் கூட புதிய சீருடைகளை அணிந்து கொண்டும், புத்தகப் பை கொண்டும் சென்றனர்.
முதல் நாள் என்பதால் மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர் ஆசி வழங்கி பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக் கூடங்களுக்கு வழக்கமான பள்ளிக்கூட வேன்கள், ஆட்டோக்கள், பெற்றோருடன் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றில் சென்றனர்.
பாடப்புத்தகங்கள்,நோட்டு புத்தகங்கள்
பள்ளிக்கூடம் சென்றதும் கடவுள் வாழ்த்து பாடலுடன் பிரார்த்தனை தொடங்கியது. பிரார்த்தனை முடிந்ததும் வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். உடனே அவர்களுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவுப்படி ஆசிரியர்கள் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார்கள். அவற்றை மகிழ்ச்சியுடன் மாணவ-மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.
மேற்கண்ட விலை இல்லா பொருட்களை பெற்ற சென்னை எழும்பூர் மாநில மகளிர் பள்ளி பிளஸ்-2 மாணவிகள் சிலர் கூறியதாவது:-
எங்கள் அம்மா, அப்பா அவர்கள் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் ஆகியவற்றை விலைக்கு வாங்கி படித்தனர்.
ஆனால் இப்போது தமிழக அரசு விலை இன்றி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வழங்குகிறது. அதற்காக தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புத்தகங்களை வெளியில் வாங்கினால் அதிக பணம் செலவாகிறது. ஆனால் விலை இன்றி அரசு தருகிறது. இதனால் பெற்றோர்களின் சுமை குறைகிறது. எனவே நன்றாக படிப்போம் என்பதை உறுதி கூறுகிறோம்.
இவ்வாறு அந்த மாணவிகள் தெரிவித்தனர்.
அதிக மதிப்பெண் எடுங்கள்
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மற்ற விலை இல்லா பொருட்களும் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் வழங்கப்படும். மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும். எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் மிக அக்கறையுடன் படித்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நல்ல தேர்ச்சி சதவீதத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
எல்.கே.ஜி. வகுப்புகள்
பெரும்பாலான பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் நேற்று திறக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் வேறு வேறு தேதிகளில் திறக்கப்பட உள்ளன.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H