இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளில் ஒன்று கடற்படை. இந்த படைப்பிரிவில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது பிளஸ்-2 படித்தவர்களை மாலுமி பணிக்கு (எஸ்.எஸ்.ஆர்.- 1/2016 பேட்ஜ்) சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.
இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் சேருவதற்கான இதர தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது...வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-2-1995 மற்றும் 31-1-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.
கல்வித் தகுதி:
10+2 முறையில் மேல்நிலைக் கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உடல் உறுதி திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.
உடல் தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.
பார்வைத்திறன் கண்ணாடி இல்லாமல் 6/6 மற்றும் 6/9 என்ற அளவுக்குள்ளும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றுடன், தேவையான சான்றிதழ் நகல்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து சாதாரண தபாலில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விண்ணப்பதாரர்கள் Post Box No.488, Cole Dak Khana, GPO, New Delhi-110001 என்ற முகவரிக்கு நகல் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்:
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 7-6-15
நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : 15-6-15
மேலும் விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.nausenabharti.nic.in