பாலியல் புகார் கொடுத்ததால் பள்ளி நிர்வாகம் பல வழிகளில் கொடுமை
செய்வதாகவும், அதனால் வேறு பள்ளிக்கு தன்னை பணியிட மாற்றம் செய்யக்கோரி
தலைமை ஆசிரியை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தொடக்கக்கல்வி
இயக்குனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் எஸ்.ஸ்ரீதேவிபிரியா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலியல் குற்றச்சாட்டு
கொருக்குப்பேட்டையில் உள்ள ஆர்.ஜெ.ஆர். நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்கிறேன். இந்த பள்ளியில் செயலாளராக முன்பு இருந்த புஷ்பராஜ், பாலியல் தொந்தரவு கொடுத்ததால், போலீசில் புகார் செய்தேன். இதுதொடர்பான வழக்கு, ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, புஷ்பராஜ் பள்ளிச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவரது மனைவி ஜெயந்தி அப்பதவியில் உள்ளார்.
இவர், விதிமுறைகளை பின்பற்றாமல் என்னை கடந்த 2013-ம் ஆண்டு பணி இடைநீக்கம்
செய்தார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அந்த உத்தரவுக்கு
இடைக்கால தடை பெற்றேன்.சென்னை, கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் எஸ்.ஸ்ரீதேவிபிரியா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலியல் குற்றச்சாட்டு
கொருக்குப்பேட்டையில் உள்ள ஆர்.ஜெ.ஆர். நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்கிறேன். இந்த பள்ளியில் செயலாளராக முன்பு இருந்த புஷ்பராஜ், பாலியல் தொந்தரவு கொடுத்ததால், போலீசில் புகார் செய்தேன். இதுதொடர்பான வழக்கு, ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, புஷ்பராஜ் பள்ளிச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவரது மனைவி ஜெயந்தி அப்பதவியில் உள்ளார்.
இடமாற்றம்
தற்போது வகுப்பு அறையிலும், தலைமை ஆசிரியர் அலுவலகத்திலும் எனக்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள், மேஜைகளை பள்ளி செயலாளர் அகற்றி விட்டார். கழிவறையை மூடியது மட்டுமல்லாமல், என் அலுவலக அறைக்கு வழங்கப்பட்டிருந்த மின்சார இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து தொடக்கப் பள்ளித் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என்னை சென்னையில் உள்ள வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யக்கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த மார்ச் 18-ந்தேதி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, என்னை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யவும் அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நோட்டீசு
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.