பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்த போது மத்தியபிரதேச மாநிலம்
இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ
கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக
டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
தொடர்ந்தது.டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்
நீதிபதி அஜய்குமார் ஜெயின் முன்னிலையான அமர்வில் இந்த வழக்கு விசாரணை
நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது
கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கை இன்னும் தயாராகவில்லை, எனவே
சிறிது அவகாசம் தேவை என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை
ஏற்றுக்கொண்ட நீதிபதி, 10–ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
என்று சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 20–ந்
தேதிக்கு ஒத்திவைத்தார்.







