சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு 28 காசுகளும், டீசல் 77 காசுகளும் குறைந்தது.
சற்று குறைந்தது
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15
நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகிறது.
கடந்த
3 முறை தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை
சிறிது குறைந்தது. அதே சமயம் டீசல் விலை ஜூன் மாதத்தில் 2–வது முறையாக
நேற்று குறைந்தது.
28 காசுகள் குறைந்தது
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் குறைந்து ரூ.66.62 ஆனது. டீசல் விலை 71 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.50.22 ஆனது.
சென்னையை
பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.12–ல் இருந்து 28 காசுகள் குறைந்து
ரூ.69.84 ஆனது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.54.29–ல் இருந்து 77 காசுகள்
குறைந்து ரூ.53.52 ஆனது.
மும்பையில் பெட்ரோல் விலை 26 காசுகள்
குறைந்து லிட்டர் ரூ.74.52 ஆகவும், டீசல் விலை 73 காசுகள் குறைந்து லிட்டர்
ரூ.57.64 ஆகவும் ஆனது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 33 காசுகள்
குறைந்து லிட்டர் ரூ.74.09 ஆகவும், டீசல் விலை 70 காசுகள் குறைந்து லிட்டர்
ரூ.54.75 ஆகவும் ஆனது.
சர்வதேச சந்தையில் குறைந்தது
கடந்த 16–ந் தேதிக்கு பின்னர் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல்
விலைகள் சற்று குறைந்துள்ளதாலும், ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதாலும்
அந்த பலன்கள் பெட்ரோல், டீசல் நுகர்வோர்களுக்கு வழங்கப்படுவதாக எண்ணெய்
நிறுவனங்கள் அறிவித்துள்ளன.







