நாடு முழுவதும், 900க்கும் அதிகமான ஐ.பி.எஸ்., அதிகாரி பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் திரட்டியுள்ள தகவல்கள் விவரம்:கடந்த
ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும், 906 ஐ.பி.எஸ்., அதிகாரி
பதவிகள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் தற்போது, 3,848 ஐ.பி.எஸ்.,
அதிகாரிகள் பணியில் உள்ளனர். தவிர, கடந்த 2014 ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி
பெற்ற, 145 பயிற்சி அதிகாரிகளும் உள்ளனர்.
அதிகபட்சமாக, உ.பி.,யில்,
129 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இங்கு, அனுமதிக்கப்பட்ட மொத்த
அதிகாரிகள் எண்ணிக்கை, 517. மேற்கு வங்கத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எண்ணிக்கை, 347. இதில், 98 இடங்கள் காலியாக உள்ளன.
ஒடிசாவில் 79, மகாராஷ்டிராவில் 62, கர்நாடகாவில் 59 ஐ.பி.எஸ்., அதிகாரி
பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தியாவில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு,
139 போலீசார் உள்ளனர். இவ்வாறு, மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள்
கூறுகின்றன.







