டிரைவர் பணிக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற
விதிமுறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசிடம், மாநில அரசு பேச்சு நடத்தி
வருகிறது,” என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.
டிரைவர்கள் சங்கம்
கர்நாடக
மாநில வாகன டிரைவர்கள் சங்கம் சார்பில், யவனிகாவில் நடந்த, 'வாய்ஸ் ஆப்
சாரதி' பத்திரிகை வெளியீட்டு நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி
பேசியதாவது:
சமீபத்தில், மத்திய அரசு செயல்படுத்தியுள்ள
விதிமுறைகளால், டிரைவர்களுக்கு பல தொந்தரவு ஏற்படுகிறது என்பது, மாநில
அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், மத்திய
அரசுடன் பேச்சு நடத்தப்படுகிறது. டிரைவர் பணிக்கு, எட்டாம் வகுப்பு
கட்டாயம் என்ற விதிமுறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசிடம் வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி நாயக் பேசியதாவது:
டிரைவர்களை
சிலர், அலட்சியப்படுத்துகின்றனர். இதற்கு, அரசு கடிவாளம் போட வேண்டும்.
சமூக பாதுகாப்பிலிருந்து வஞ்சிக்கப்பட்டு, வாழ்க்கை நடத்தி வரும்
மிகப்பெரிய சமுதாயம் என்றால், அது டிரைவர்கள் தான்.
சலுகைகள்
அவர்களுக்கு
வேண்டிய சலுகைகள், அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். பயணிகள்,
தங்களின் உயிர், மானத்தை உங்கள் (டிரைவர்) கையில் கொடுத்து விட்டு, தினமும்
பயணிக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். இவ்வாறு, அவர்
பேசினார்.







