ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: அ.தி.மு.க. அரசாங்கமே செயல்படாம முடங்கி கிடக்கு. உங்க போராட்டத்துல வந்து நான் பேசுறேன். நான் வந்து பேசுறதால அரசு உங்க கோரிக்கையை நிறைவேற்றலைன்னு சொன்னா. என்னை நீங்க கோவிச்சுக்க கூடாது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்: ஆசிரியர் சங்க நிர்வாகிங்க இவ்வளவு பேர் வந்திருக்கீங்க. அதோடு மீடியாவும் நிறைய வந்திருக்கு. தி.மு.க. கிட்ட வந்துட்டதால உங்களுக்கு நெகட்டிவ்வாக போயிடப்போகுது. பார்த்துக்கங்க. ஆனா எங்க ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: அ.தி.மு.க. ஆட்சியில் அரசாங்கமே செயல்படலை. இதுல அந்த அம்மா கல்வித்துறையை மட்டுமா கண்டுக்க போறாங்க. உங்க கோரிக்கைகள் பற்றி எழுதி கொடுத்துட்டு போங்க. நான் படிச்சு பார்த்துட்டு போராட்டத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அறிக்கை விடுறேன். ராகுல்காந்தி 23ம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றாரு. அதனால கொஞ்சம் பிசியாக இருக்கேன். முடிஞ்ச அளவு போராட்டத்துக்கு வர்றேன்.
பா.ம.,க. தலைவர் டாக்டர் ராமதாஸ்: இந்த அம்மா டாஸ்மாக் மதுபானக்கடையை திறந்து வச்சுக்கிட்டு பள்ளிக்கூட மாணவர்களை கூட மதுவுக்கு அடிமையாக்கிட்டாங்க. இப்படியே போனா தமிழ்நாடு குடிகார நாடாக போயிரும். உங்க கோரிக்கை சம்மந்தமாக ஏற்கனவே வாத்தியாராக இருந்த எங்க ஜி.கே.மணிக்கிட்ட கலந்துக்கிட்டு அறிக்கை விடுறதோடு, கண்டிப்பாக போராட்டத்துக்கு வர்றேன்.
கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: உங்க கோரிக்கைகள் நியாயமானதுதான். ஆனா, பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நிறைய சம்பளம் வாங்கிக்கிட்டு ஒழுங்காக வேலை செய்யுறதில்லைன்னு ஒரு எண்ணம் இருக்கு. முதலில் அந்த எண்ணத்தை மாத்துறது மாதிரி உங்க நடவடிக்கைகள் இருக்கணும். பொதுமக்கள் மனசுல இருக்கிறதை புரிஞ்சுக்கிட்டு உங்க கடமையை ஒழுங்காக செய்யுங்க. உங்க போராட்டத்துக்கு எங்க ஆதரவு நிச்சயம் உண்டுன்னு சொல்லி அட்வைஸ் செஞ்சு அனுப்பினாராம்.
இதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சியான தே.மு.தி.,க. தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு ஜாக்டோ அமைப்பினர் கடிதம் கொடுத்துள்ளார்களாம். கேப்டன் இப்போ ரொம்ப பிசின்னு தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லியிருக்கிறார்களாம்.
http://www.vikatan.com/news/article.php?aid=49318








