உயர்கல்வியை மேம்படுத்த ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்,'' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) துணைத்தலைவர் தேவராஜ்
கூறினார்.காரைக்குடி
அழகப்பா பல்கலை மகளிரியல் துறை சார்பில், 'பெண்களின் சமூக மாற்றம் மற்றும் சமத்துவ பாலினம்' குறித்த கருத்தரங்கு துவங்கியது.
இதில்
அவர் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக பல்கலை, கல்லுாரிகளில் 'பாலின
சமநிலை' என்ற குறிக்கோளுடன் யு.ஜி.சி., செயல்படுகிறது; தற்போது அதை
எட்டிவிட்டோம். அடுத்த 15 ஆண்டுகளில் தரத்தை முன்னிறுத்தி செயல்படுகிறோம்.
உயர்கல்வியில் யு.ஜி.சி., மூலம்
ஆயிரம்சிறப்பு பேராசிரியர்கள் பல்கலை, கல்லுாரிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.
யு.ஜி.சி.,யை
மேம்படுத்தும் வகையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஹரிகவுதம்
கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. யு.ஜி.சி., க்கும், மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்துக்கும் முரண்பாடு இல்லை. தொலை நிலைக் கல்வியில் தவறுகளை களையவே
அதன் எல்லைக்குள் படிப்பு நிலையங்களை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.
'மோக்ஸ்' (மாசிவ் ஓப்பன் ஆன் லைன் கோர்ஸ்) என்ற பெயரில் திறந்த வெளி இணைய
படிப்பு யு.ஜி.சி.,யால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி
அறிவிப்பின்படி 'சுயம்' எனப்படும் 'ஆன் லைன்' (போர்ட்டல்) படிப்பும்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பெண்கள் பாலின
சமன்பாடு 42 சதவீதம் உள்ளது. 'வரும் 2020ல் பாலின சமன்பாடு 30 சதவீதத்தை
எட்ட வேண்டும்' என, அப்துல்கலாம் கூறினார். தமிழகம் தற்போதே அதை தாண்டி
விட்டது, என்றார்.
மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை வரவேற்றார். துணைவேந்தர் சுப்பையா, சிங்கப்பூர்
பல்கலை பேராசிரியர் அனிதா லண்ட்பர்க், பேராசிரியர் முருகன் பங்கேற்றனர்.