விண்ணப்பங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை சனி, ஞாயிறு உள்பட அரசு விடுமுறை நாள்களிலும் காலை 10 மணி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
விண்ணப்பக் கட்டணம் ரூ, 300 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கல்விக் கட்டணம் ரூ. 175. கட்டணத்தை பணமாகவோ அல்லது, "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை, சென்னை - 600005' என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாக சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
பி.எட். சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.








