துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில் 5,213 இடங்கள் காலியாக உள்ளன.
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
பி.எஸ்சி.
செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம், உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான
அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு
நடைபெறுகிறது. புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 608 இடங்கள் நிரம்பின. துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அரசு கல்லூரிகளில் உள்ள 553 இடங்கள் மூன்று நாள்கள் கலந்தாய்வில் நிரம்பின. புதன்கிழமை நடைபெற்ற நான்காம் நாள் கலந்தாய்வில் மீதம் இருந்த இரண்டு அரசு கல்லூரி இடங்களும் நிரம்பின. இதுதவிர தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 606 இடங்கள் நிரம்பியுள்ளன. புதன்கிழமை மாலை கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 608 இடங்கள் நிரம்பின. மீதம் 5,213 இடங்கள் காலியாக உள்ளன.