இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தாலும், பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகின்ற காரணத்தாலும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பி.எட், எம்.எட், பி.பி.எட், எம்.பி.எட், டி.டி.எட். படிப்புகளை வழங்கிவரும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு 2015-16 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிடமிருந்து கல்விக் கட்டணப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை வருகிற 31-ஆம் தேதிக்குள் உரிய படிவத்தில் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பரிந்துரைகளுக்கான மாதிரி படிவத்தை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து கல்லூரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








