இந்தியா
முழுவதும் ஒரே மாதிரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு
வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட்
கூறினார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 சதவீத இடஒதுக்கீடுமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு தற்போது 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் இடஒதுக்கீடு வித்தியாசப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 5 சதவீதமும், தமிழகத்தில் 3 சதவீதமும் உள்ளது.
இந்த நிலைமையை மாற்றி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது 17 வகை உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இனி 19 வகை ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். மத்திய அரசு தற்போது வழங்கும் 3 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசிடம் ஆலோசனை
திருநங்கைகளை மத்திய அரசு 3-வது பாலினமாக அங்கீகரித்து உள்ளது. இவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் சாதி மோதல் குறித்து மத்திய அரசுக்கு எந்த வித புகாரும் வரவில்லை. அப்படி வந்தால் அதை தடுப்பது குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.