நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும், மாதத்தின், 2வது மற்றும் 4வது
சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது; இதனால், வங்கி ஊழியர்கள்
மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள்
சம்மேளனத்தின் பொதுச் செயலர் வெங்கடாசலம் கூறியதாவது:
வங்கி
ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதால், மாதத்தின் இரு சனிக்கிழமைகளில்,
வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தோம்.
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை, அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து,
மாதத்தின், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில், வங்கிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை, செப்., 1ம் தேதி முதல் அமலுக்கு
வரும். விடுமுறையால், வங்கி ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என்பதால்,
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும். இதனால், வங்கித் துறை
வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.