நான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றை அகராதிப்படி வரிசைப்படுத்தி அமைப்பதே அகரவரிசைப்படி சொற்களை சீர்செய்தல் ஆகும்.
நிலை -1
முதலில்அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப் படுத்த வேண்டும்.
நிலை-2
முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்த வேண்டும்..
நிலை-3
உயிர்மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..
குறிப்பு:
எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப்படுத்தக் கூடாது..
மாதிரிவினாக்கள்:
நிலை-1
எளிமை,ஊக்கம்,இனிமை,ஆயிரம்
விடை:
ஆயிரம்,இனிமை,ஊக்கம்,எளிமை
நிலை-2
தத்தை,தண்ணீர்,தந்தம்,தங்கை
விடை:
தங்கை,தண்ணீர்,தத்தை,தந்தம்
நிலை-3
கோமாளி,காலை,கலை,கொக்கு
விடை:
கலை,காலை,கொக்கு,கோமாளி
இதில் சில கேள்விகள் எளிதாகவும் சில கேள்விகள் சற்று கடினமானதாகவும் இருக்கும்.
குறிப்பு:
அகர வரிசை பிழையின்று சீர்படுத்த 'அ' முதல் 'ன்' வரையிலான தமிழ் அரிச்சுவடியை மீண்டும் ஒருமுறை நன்றாக வாசித்துக்கொள்ளுங்கள்.








