பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வருகிற
18-ஆம் தேதி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்)
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம்
தெரிவித்தது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
பிளஸ்-2
துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற
இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம்
செய்யலாம்.விண்ணப்பித்தவர்களில், பிளஸ்-2 செய்முறைத் தேர்வில் 40
மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்பதோடு,
செய்முறைத் தேர்வையும் மீண்டும் செய்ய வேண்டும்.
இதுபோல, முதல்முறையாக
பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் (ஹெச்.பி.
வகை) பகுதி 1, பகுதி 2 மொழிப் பாடத்தின் இரண்டு தாள்களையும், பகுதி 3-இல்
சிறப்பு மொழியை (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன்
தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
கேட்டல், பேசுதல் திறன்
தேர்வுக்கான தேதியை சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மைக்
கண்காணிப்பாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.