துணை மருத்துவ படிப்புகள்: 2,513 காலியிடங்கள்:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கான
இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முடிவில் 2,513 காலியிடங்கள் உள்ளன.
துணை
மருத்துவப் படிப்புகளுக்காக, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு
மருத்துவமனையில் நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் 555 அரசு ஒதுக்கீட்டு
இடங்களும் நிரம்பின. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,517
நிரம்பின.
முதல்நாள் கலந்தாய்வில் 275 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாள் கலந்தாய்வுக்கு 1,010 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில்
518 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். பி.எஸ்சி. செவிலியர் 379, பி.பார்ம்
87, இயன்முறை மருத்துவம் 28, ஆக்குபேஷனல் தெரபி 3 என மொத்தம் 497 இடங்கள்
நிரம்பின.
மீதம் உள்ள 2,513 இடங்களுக்கு தொடர்ந்து செப்டம்பர் 16, 18, 19 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும்.