15 ஆயிரம் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு: ஸ்டான்லி மருத்துவமனை திட்டம்:
வட சென்னையில் 15 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.சென்னை
அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில், டெங்கு விழிப்புணர்வுப் பேரணி
அண்மையில் நடைபெற்றது. மருத்துவமனையின் சுற்றுப்புறப் பகுதியில் நடைபெற்ற
இந்தப் பேரணியில் 450 மருத்துவ மாணவர்கள், 150 செவிலிய மாணவிகள்
பங்கேற்றனர். இது குறித்து மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
மழைக்காலத்தில்
வீடுகளில் வாளி, தொட்டி, கொட்டாங்குச்சி, டயர் உள்ளிட்டவற்றில் நீர்
தேங்காமல் பாதுகாக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்
கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரை மட்டுமே குடிக்கவும், பயன்படுத்தவும் செய்ய
வேண்டும். வீடுகளில் கொசுக்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
கருத்துகளை பொதுமக்களுக்கு கூறி வருகிறோம்.
பள்ளிகளில்: இதுதவிர
வடசென்னையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று டெங்கு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதுவரை பத்து பள்ளிகளைச் சேர்ந்த 2,500
மாணவர்களைச் சந்தித்துள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்தில் சுமார் 70
பள்ளிகளில், 15 ஆயிரம் பள்ளி மாணவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்
என்று அவர் தெரிவித்தார்.