பார்வையற்றவர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்:
பார்வையற்றவர்களுக்கான இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் அக்டோபர் 7 ஆம்
தேதி தொடங்க இருப்பதாக சென்னை கர்ண வித்யா தொழில்நுட்ப மையம்
அறிவித்துள்ளது.பிளஸ்-2 அல்லது பட்டப் படிப்பு முடித்த பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதுகுறித்து கர்ண வித்யா அமைப்பு வெளியிட்ட செய்தி:பார்வையற்றவர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கர்ண வித்யா அமைப்பு ஒவ்வொரு
ஆண்டும் இதுபோன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்போது "எனேபுல் இந்தியா'
என்ற அமைப்புடன் இணைந்து இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்க உள்ளது.
இது
6 மாத காலப் பயிற்சியாகும். இதில் ஆங்கில மொழி பேச்சுத் திறன், எழுத்துத்
திறனை மேம்படுத்துதல், கணினி பயிற்சி, வாழ்வியல் கலை உள்ளிட்ட பயிற்சிகள்
அளிக்கப்படும்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கர்ண வித்யா தொழில்நுட்ப
மைய வளாகத்தில் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இந்தப் பயிற்சி தொடங்க
உள்ளது.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்கும் வசதியும்
ஏற்பாடு செய்து தரப்படும். பயிற்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு
வேலைவாய்ப்புக்கான பரிந்துரையும் செய்யப்படும்.
விருப்பமுள்ளவர்கள்
வருகிற 29-ஆம் தேதிக்குள் கிண்டியில் உள்ள கர்ண வித்யா தொழிóல்நுட்ப மைய
அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
மைய நிர்வாகிகள் ரகுராமன், நந்தகுமார் ஆகியோரை 9840018012, 9940083137 ஆகிய
செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.