இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ), வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.








