தருமபுரி பெரியார் மன்றத்தில் 108 ஆம்புலன்ஸில்
மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும்
வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலத்தின் எந்த
பகுதியிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். வெளியூரில் இருந்து வரும்
விண்ணப்பதாரர்கள் அவரவர் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும்.
ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அல்லது தவறியிருப்பதுடன், 25லிருந்து 35 வயதுக்குள், 162.5 செ.மீட்டருக்கு
குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி, ஓட்டுனர் உரிமம், அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்கள் எடுத்து வர வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு 9 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி
வழங்கப்படும். பயிற்சியின் போது தங்கும் வசதி, தினசரி உணவுக்கு ரூ. 100
அளிக்கப்படும். இவர்களுக்கான மாத ஊதியம் ரூ.10,300.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் படித்திருப்பதுடன் 20
முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.10,800, இதர படிகள்
அளிக்கப்படும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாள்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி,
மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 89397-89217, 89398-54602 ஆகிய
செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








