எம்.பி.பி.எஸ். 3-ஆம் கட்டக் கலந்தாய்வு எப்போது? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


எம்.பி.பி.எஸ். 3-ஆம் கட்டக் கலந்தாய்வு எப்போது?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்திலும் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
 சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் ஜூலை 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை வகுப்புகள் தொடங்க உள்ளன.
 செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு...எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலான கலந்தாய்வு அடிப்படையில் உரிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு செப்டம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகுதான் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராத மாணவர்களின் காலியிடம் குறித்த விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கூடுதல் இடங்களில் சேர...இந்த நிலையில் 69 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக இடம் கிடைக்காத பொதுப் பிரிவைச் சேர்ந்த 8 மாணவர்கள் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட உள்ள கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர உத்தரவைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் பொதுப் பிரிவைச் சேர்ந்த 27 மாணவர்கள் உள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 8 மாணவர்கள் உள்பட பொதுப் பிரிவைச் சேர்ந்த 27 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
 3-ஆம் கட்டக் கலந்தாய்வு: எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 27 மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட உள்ள கூடுதல் இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மேல் நடத்தப்படும் 3-ஆம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H