கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குநர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்படுவதைத் தவிர்த்து நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும்.
மண்டல இணை இயக்குநர் பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யவேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களை அரசு நிறைவேற்றத் தவறினால், நடைபெற உள்ள நவம்பர் மாத பல்கலைக்கழக பருவத் தேர்வுப் பணிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட போராட்டங்கள் மூலம் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஈடுபடுவர் என்றார் அவர்.








