‘பள்ளியில் நான் சராசரி மாணவன்தான், ஆனால் கடுமையாக உழைத்தேன்’ மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாறு குறித்து கற்பித்தார்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


‘பள்ளியில் நான் சராசரி மாணவன்தான், ஆனால் கடுமையாக உழைத்தேன்’ மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாறு குறித்து கற்பித்தார்:

ஜனாதிபதி மாளிகையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாறு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார்.
அனுபவங்களை பகிர்ந்தார்
ஆசிரியர் தினம் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலாயா பள்ளியில் 11 மற்றும் 12–ம் வகுப்பு படிக்கும் சுமார் 300 மாணவ–மாணவிகள் வந்திருந்தனர்.

அவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒருநாள் ஆசிரியராக மாறி அவர்களுக்கு பாடம் நடத்தினார். அதற்கு முன் தனது பள்ளிப்பருவ அனுபவங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
குறும்புக்காரன்
அவர் கூறும்போது, ‘நான் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு அப்பால் தான் பள்ளிக்கூடம் இருந்தது. தினமும் பள்ளிக்கு நடந்தே சென்ற நாங்கள், மழைக்காலத்தில் புத்தகங்களை பாதுகாக்க வித்தியாசமான உடைகளை அணிந்து செல்வோம். அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால், மண்எண்ணெய் விளக்கில் தான் பாடங்களை படிப்போம்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘சிறுவயதில் நான் அதிக குறும்புகளை செய்வேன். பள்ளியிலும் சராசரி மாணவனாகவே இருந்தேன். ஆனால் நான் கடினமாக உழைக்க என்னுடைய அம்மா தூண்டினார். அதன்படி நான் கடினமாக உழைத்தேன்’ என்றும் தெரிவித்தார்.
பாடம் நடத்தினார்
இதைத்தொடர்ந்து ‘சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாறு’ குறித்து மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தினார். அதற்கு முன், தான் கற்பிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், உடனே கேட்கலாம் என்றும் மாணவர்களிடம் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய ஜனநாயகம்
இந்திய அரசியலமைப்பு, நாட்டுக்கு தேவையான சட்டங்களை உருவாக்க வழிவகுத்தது. இந்தியா விடுதலை பெற்ற பின், அரசியலமைப்பை உருவாக்க 3 ஆண்டுகள் பிடித்தது.
பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த நான் மத்திய அரசியலுக்கு வந்துள்ளேன். அந்தவகையில் சாதாரண குடிமகனுக்கும், தனது விருப்பத்தை நிறைவேற்ற இந்திய ஜனநாயகம் வாய்ப்பை வழங்குகிறது.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சி தொடர்பாக அரசுகளிடம் இருந்து மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்திய பொருளாதாரத்தில் போதிய வேகம் இல்லை என குறை கூறுகின்றனர். அரசின் கொள்கைகளில் மக்கள் தவறுகளை கண்டால், சில நேரம் அவை சரியாகவும் இருக்கும்.
ஆனால் நாம் செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும், 93 பைசா நமது சொந்த சேமிப்பேயன்றி, கடன் வாங்கிய வளங்கள் அல்ல. இது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயமாகும். பொருளாதார தாராளமயமாக்கலில் நரசிம்மராவின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H