கல்லூரி தொடங்கும் முன்னரும், மதிய இடைவேளைக்குப் பின்னரும், கல்லூரி முடிந்த பின்னரும், செவ்வாய்க்கிழமை அரசுக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
"கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், கலந்தாய்வு இன்றி செய்யப்படும் இடமாறுதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கல்லூரிக் கல்வி இயக்குநர், மண்டல இணை இயக்குநர் பதவிகளுக்கு பணி மூப்பு அடிப்படையிலேயே நியனமங்கள் செய்யப்பட வேண்டும்.
2011-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்களை உடனடியாக பணி வரன்முறைப் படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னையில் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) சங்கத்தின் ஆட்சிக் குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.








