ஒவ்வொரு பல்கலை சார்பிலும், 300க்கும் மேற்பட்ட கோப்புகள் செயலர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. பல்கலை நிர்வாகப் பணிகள் முடங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஒரு பல்கலையில் துணைவேந்தர் பதவிக் காலம் முடிந்த பின், அங்குள்ள மூத்த சிண்டிகேட் உறுப்பினர் தலைமையில், 'கன்வீனர் கமிட்டி' அமைக்கப்பட்டு, பல்வேறு முடிவுகள் உடன் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், சில ஆண்டுகளாக பல்கலை 'கன்வீனர் கமிட்டி' தலைவராக, உயர் கல்வித்துறை செயலர் நியமிக்கப்படுகிறார்.
இதனால் பல்கலை மேற்கொள்ளும் சாதாரண முடிவை கூட, செயலர் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. கோப்புகளில் கையெழுத்து பெற, மாதத்தில் பல நாட்கள் இப்பல்கலைகளின்
பதிவாளர்கள், சென்னை செயலர் அலுவலகத்தில் காலத்தை கழிக்க வேண்டிய நிலை உள்ளது; இதனால் நிர்வாகப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்கலை பணியாளர்கள் பதவி உயர்வு, ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வு தேதி முடிவு செய்வது மற்றும் அதற்கான
உத்தரவுகள் பிறப்பிப்பது போன்றவற்றில் தாமதம் நீடிக்கிறது. 'துணைவேந்தர் தேர்வுக்குழு' சுறுசுறுப்புடன் செயல்பட்டு விரைவில் புதிய துணைவேந்தர்களை
தேர்வு செய்ய முன்வர வேண்டும் என்றனர்.








