ராமநாதபுரம் அகழ்வாய்வில் இரண்டு ஊர்கள் கண்டுபிடிப்பு? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ராமநாதபுரம் அகழ்வாய்வில் இரண்டு ஊர்கள் கண்டுபிடிப்பு?

ராமநாதபுரம் அருகே, சங்க காலத்தைச் சேர்ந்த இரண்டு ஊர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் ராஜகுரு, டாக்டர் ராஜமோகன் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:
உத்திரகோசமங்கை அருகே, கீழச்சீத்தை கானத்திடல் என்ற இடத்தில், கசிவுநீர் குட்டைக்காக தோண்டிய இடத்தை மேற்பரப்பாய்வு செய்தபோது, ரோமானிய, 'ரவுலெட்டட்' ஓடுகள், சீனாவின், 'பார்சிலின்' ஓடுகள், இரும்பு கோடாரி, இரும்பு தாதுக்கள், சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் விளக்கு, பவளப்பாறைகள் உள்ளிட்ட, 15 வகை பொருட்கள் கிடைத்தன.இந்த பழம்பொருட்களை கொண்டு, அங்கு சங்க கால நகரம் இருந்ததை அறிய முடிகிறது.
கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கி.மு., 300 முதல், கி.பி., 200 வரை வாழ்ந்த சங்க கால மக்கள் அதிகம் பயன்படுத்தியவை என்பதால், இதை சங்க கால பானை ஓடுகள் என, தொல்லியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இவற்றை வைத்துப் பார்த்தால், இவ்வூர் மக்கள் ரோமானியர், சீனர்களுடன் வணிகம் செய்திருப்பது உறுதியாகிறது. ரோமானியர்கள், கி.மு., 300 முதல் கி.பி., 100 வரை தமிழகத்துடன் வணிகம் செய்துள்ளதால், இவ்வூர் 1,500 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என, கருதத் தோன்றுகிறது.கருப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானை ஓடுகள் சிலவற்றில் திரிசூலம், ஏணி குறியீடுகள் உள்ளன. வெள்ளா மறிச்சுகட்டி கண்மாய் மேற்பரப்பு ஆய்வில், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், கூரை ஓடுகள் கிடைத்துள்ளதால், அவ்விடத்திலும் சங்க கால ஊர் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இப்பகுதிகளில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து, வரலாற்று சிறப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H