இதுதொடர்பாக கலாசாரம் மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சகங்கள் பணியாற்றி வருகின்றன.
இதுகுறித்த திட்டத்தினை மத்திய கலாசார துறை ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மா, டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘நமது கலாசாரத்தின் ஒரு அம்சமாகவே இந்த திட்டத்தை கொண்டு
வரப்போகிறோம். மாணவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மற்றும்
சாதி, இன, மதத்துக்கு அப்பாற்பட்டு பிற போதனைகளும் கற்றுத்தரப்படும்.
அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்க விரும்புகிறது என்பதுபோன்று
விமர்சனங்கள் வந்தாலும் இதில் இருந்து பின்வாங்க மாட்டோம்’’ என கூறினார்.







