அதனைத்தொடா்ந்து மாலையில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலா்கள்(பொ) புதுக்கோட்டை ப.மாணிக்கம், அறந்தாங்கி ஆா்.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி கலந்துகொண்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்ற படைப்பினை படைத்த முத்துப்பாண்டியை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து இன்று 7ந்தேதி(திங்கட்கிழமை)
காலை இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை இறைவணக்கக்கூட்டத்தில்
மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்ற செயற்கைக்கோள் படைப்பினை படைத்த மாணவா் முத்துப்பாண்டி
மற்றும் கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் தோ்வு பெற்ற படைப்பினை படைத்த
மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் சி.பழனிவேலு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும்
மாணவா்கள் சிறந்த படைப்புகளை படைக்க வழிகாட்டியாக செயல்பட்ட வழிகாட்டி ஆசிரியை ஆா்.சாந்தியை
பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவித்தலைமையாசிரியா்கள்
ஆசிரிய. ஆசிரியைகள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.படவிளக்கம் மாநில அறிவியல் கண்காட்சிக்கு
தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா் முத்துப்பாண்டியை பாராட்டி புதுக்கோட்டை
திருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலா் செ.சாந்தி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் புதுக்கோட்டை
மாவட்டக்கல்வி அலுவலா் (பொ) ப.மாணிக்கம் மற்றும் பலா் உள்ளனா்.







