Ganesh Chaturthi celebration ceremony today in Chennai statues to be placed in 2,093 locations: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Ganesh Chaturthi celebration ceremony today in Chennai statues to be placed in 2,093 locations:

இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் சென்னையில் 2,093 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னையில் 2,093 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 20-ந் தேதி முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
சென்னையில் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பிரமாண்டமாக நடக்கிறது. அடுத்து 21-ந் தேதி, 23-ந் தேதி ஆகிய நாட்களிலும் மற்ற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலம் நடக்கும். சிவசேனா குமாரராஜா பிரிவு சார்பில் மட்டும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை வருகிற 27-ந் தேதி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப்போல...

சென்னை நகரில் கடந்த ஆண்டு 2093 இடங்களில் 2,093 பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டது. அதே இடங்களில் தற்போதும் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறது. இந்து முன்னணி தவிர மேலும் 14 அமைப்புகள் சார்பில் சென்னையில் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகின்றன. நேற்று இரவோடு இரவாக சென்னையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

18 ஆயிரம் போலீஸ் குவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். சென்னையில் வைக்கப்படும் ஒவ்வொரு சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பாக நிறுத்தப்படுகிறார்கள்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், தமிழகம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தி டி.ஜி.பி. அசோக்குமார் ஆணையிட்டுள்ளார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H