முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி
என்ற பெயரில் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று,
தமிழகத்தில் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரின் சிலைகளை வைத்து
பூஜை செய்கிறார்கள். பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக் கட்டை எனப்படும்
மோதகம். விநாயக சதுர்த்தியன்று இந்த மோதகத்தை தயாரித்து, அதனுடன் பல்வேறு
இனிப்புபந்் பண்டங்களையும் நவேதனமாகப் படைப்பார்கள்.பொது இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் விநாயகரின் பெரிய சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜை செய்கிறார்கள். தானியங்கள், அருகம்புல் உள்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் மிகப் பெரிய சிலைகள் கருத்தைக் கவரும்.








