இந்த ஒப்படைப்பு முறை கற்றலில் மாணவர்களிடம் பல்வேறு வகையான திறன்கள் ,எடுத்துக்காட்டாக ,தலைமைப்பண்பு ,குழுமனப்பான்மை ,திட்டமிடுதல் ,பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்வு காணும் திறன் ,மாற்று சிந்தனை,படைப்பாற்றல் என்று பலவிதமான திறன்கள் வளரும்.
இது ஒரு அகில இந்திய அளவிலான போட்டிக்கும் பயன்படும் .இதற்கு ஆசிரியர்களும் ,மாணவர்களும் செய்யவேண்டியது ,தங்களை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை ஆராய்வது .அது வகுப்பறை அளவிலோ,பள்ளி அளவிலோ,சமுதாயம் சார்ந்த அளவிலோ இருக்கலாம் .
பிரச்னை என்னவென்று ஆராய்ந்து அதற்குரிய தீர்வை கண்டறிந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி அதை காணொளியாக தொகுத்து போட்டிக்கு அனுப்பலாம்
இதை மாணவர்களுக்கு முதலில் வெறும் போட்டியாக அறிமுகப்படுத்தினாலும் ,பின்னர் அவர்களுக்கு இதன் பின்னால் இருக்கும் பலன்களை ஆசிரியர் மறக்ககூடாது .
வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல .பங்கேற்பு தான் முக்கியம் என்ற அழகான மனப்பானமையை மாணவர்களிடம் வளர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு .








