தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்
யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ ஜெயித்து விடுவாய்
அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயேகொடுத்து கொள்ளும் தண்டனை
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்உறங்குவது இல்லை.
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்றுயோசிக்காமல் செய்வது
இரண்டுயோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்
தோல்விசிந்தித்து வாழ வைக்கும்
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க கற்று கொண்டவர்கள்
பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இருஅப்போதுதான் பூத்து கொண்டே இருப்பாய்
எல்லோருக்கும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று ஏமாற்றி விடாதே








