Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 அதிகாரிகள் நியமனம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 அதிகாரிகளின்
நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி சுப்ரீம் கோர்ட்டில்
தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து,
தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
83 அதிகாரிகள் தேர்வு
2000–2001–ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி.
நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் அரசு உயர் பதவிகளுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக
கூறி நடராஜன் என்பவர் 2005–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 83 பேரும் தேர்ச்சி
பெற்றது செல்லாது என்றும், உடனடியாக அவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலக
வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து
பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சுப்ரீம்
கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் சென்னை
ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது.
இடைக்கால உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட
அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக புதிய மனு தாக்கல்
செய்யப்பட்டது. இதில் 83 அதிகாரிகளும் பதவியில் நீடிக்கலாம் என்று சுப்ரீம்
கோர்ட்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
மேலும் இந்த வழக்கு
தொடர்பான விடைத்தாள்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க சுப்ரீம்
கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி யு.பி.எஸ்.சி. நிறுவனம் இந்த
விடைத்தாள்களை ஆய்வு செய்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது. கடந்த
மே 6–ந் தேதி இந்த அறிக்கையை அனைத்து தரப்பினருக்கும் வழங்கவும், அதன் மீது
ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதுகுறித்து 4 வாரங்களுக்குள் எழுத்துபூர்வமாக
கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இந்த நிலையில், இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில்
நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு
முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:–
இந்த
தேர்வில் தேர்ச்சி அடைந்த 83 அதிகாரிகளின் வினாத்தாள்களை இந்த நாட்டின்
மிக உயர்ந்த பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி. நிறுவனம்
விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில்
இந்த தேர்வில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று
தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு முன்பு
வழங்கியுள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்து, மனுதாரர்களான அதிகாரிகளின் பணி
நியமனத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரத்து செய்தது சரிதான்
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடுகையில் கூறியதாவது:–
டி.என்.பி.எஸ்.சி. தன்னுடைய இணைய தளத்தில் தேர்வுக்கான விதிமுறைகள்
குறித்து மிகவும் தெளிவாக வரையறுத்து உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல்
தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களில் அடையாள குறியீடு இடுவது, ஸ்கெட்ச்
பேனா போன்றவற்றில் எழுதுவது போன்ற விதிமுறை மீறல்களை செய்து உள்ளனர்.
விடைத்தாள்களை
திருத்துபவர்களுக்கு தங்களை எளிதாக அடையாளம் காட்டுவதற்காகவே இப்படி
செய்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. விதிமுறை மீறல்களில்
ஈடுபட்டால் தேர்ச்சி ரத்து செய்யப்படும் என்று தெளிவாக
குறிப்பிட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்களுடைய பணிநியமனத்தை
ரத்து செய்தது சரிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








