இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.
மொழிப் பாடங்களுக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிறகு அளிக்கப்படும் ஒப்புகைச்சீட்டை வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.








