இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
‘அண்ணா பதக்கம்’
வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீர செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதக்கத்தை பெற தகுதி உடையவராவர். பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு இல்லை.
‘கபீர் புரஸ்கர்’ விருது
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதி உள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்-அமைச்சரால் 2016 ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவர்.
இதே போன்று, சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீர் புரஸ்கர்’ விருதுக்கு தகுதி படைத்தவர்களும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அரசு முதன்மை செயலாளருக்கு சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








