2012-ம் ஆண்டு பக்தர்கள் பார்வையில் பட்டது. சிற்பிகள் யாரும் செதுக்காமல் ‘மலையே சிலையே மாறியது போல் ஏழுமலை உருவம் காணப்படுகிறது.
பெரிய பள்ளத்தாக்கு கொண்ட அந்த மலையில் உள்ள எழுமலையான் சிலைக்கு புரட்டாசி 3–வது சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபட்டனர். மலைக்கு செல்ல எந்த பாதையும் இல்லாத நிலையில் 2 இளைஞர்கள் கயிறு கட்டி இறங்கி சிலைக்கு மஞ்சள், குங்குமம் பால் அபிஷேகம் செய்து பெரிய மாலை அணிவித்தனர்.
2–வது மலைபாதையில் கடைசி வளைவில் நின்றால் இந்த சிலை ‘பளிச்’ என்று தெரியும். அங்கு நின்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர்.
நீங்களும் திருப்பதிக்கு சென்றால் 2-வது மலைபாதையில் கடைசியின் வளைவில் அஞ்சனாத்ரி மலையில் தானே உருவாகி உள்ள ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்லலாமே!!.








