ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்
கீழ் பணியாற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்புப் பணியாளர்களுக்கு 6 மாதங்களாக
ஊதியம் வழங்கப்படவில்லை என "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர்
நாராயணன், குழந்தைகள் உரிமைகளுக்கான சட்ட வள ஆதார மையத்தைச் சேர்ந்த
கே.சண்முகவேலாயுதம் ஆகியோர் கூறினர்.சென்னையில் அவர்கள் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
தொடங்கப்பட்டது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பணியாளர்கள் ஒப்பந்த
அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு
உதவியுடன் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களின் 18 மாவட்ட வள ஆதார மையங்களில்
பணிபுரியும் மன ஆலோசகர்கள் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இதுபோன்ற திட்டங்கள்
முடங்காமல் செயல்படுவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.








