சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவமுறை- ஹோமியோபதி ஆணையர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முடிவில் சுயநிதிக் கல்லூரிகளில் 79 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு இன்று நிறைவு: இறுதி நாளான புதன்கிழமை கட்-ஆஃப் மதிப்பெண் 153.75 முதல் 100 வரை பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,502 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.








