பி.எட். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடக்கம்
இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான
இரண்டாம் கட்டக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப்
பிரிவினருக்கும், கணிதப் பாடப் பிரிவினருக்குமான சேர்க்கை நடத்தப்பட்டது.தமிழகம்
முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில்
உள்ள 1,777 இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்
நடத்துகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி
தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. இதில்,
மொத்தமுள்ள இடங்களில் 1,000 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதமுள்ள 777
இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. முதல்
நாளில் சிறப்புப் பிரிவினருக்கும், கணிதப் பாடப் பிரிவினருக்குமான சேர்க்கை
நடத்தப்பட்டது.இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:இரண்டாம்
கட்ட கலந்தாய்வுக்கு 2 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில்
சிறப்புப் பிரிவினர், கணிதப் பிரிவினருக்கான சேர்க்கையில் அனைத்து
இடங்களும் நிரம்பிவிட்டன.மீதமுள்ள இடங்களுக்கு தொடர்ந்து அக்டோபர் 15, 16-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்றார்.







