தேர்வுகளும், தேர்வாணையம் தொடர்பான நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும், உண்மைத்தன்மையுடனும், போட்டித் தேர்வு நடத்துவோருக்கு உறுதுணையாகவும் இருக்கும்.
இணைய சேவை மையங்கள்: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வழி சேவை மையங்கள் தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் என 280 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, தேர்வுக்கு நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50-ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து நகல் பெற ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்துக்குச் செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.50-ம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றையும் இணைய சேவை மையங்களிலேயே செலுத்தலாம். பணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டையும் அங்கேயே பெற்றுக் கொள்ளலாம்.
இந்தச் சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அருள்மொழி தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.








