Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்று ஆயுத பூஜை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து:
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள வாழ்த்து
செய்தியில், ‘‘விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில் ஆகியவற்றை
தொடங்கினால் அவை வெற்றி கிடைக்கும் திருநாள். நாட்டின் பிரதமராக நரேந்திர
மோடி பதவியேற்று, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் இந்த
வேளையில் அன்னை சாமூண்டீஸ்வரி மஹிஷாசுரனை வதம் செய்த வாளான விஜயதசமி
தினத்தன்று தீயவை அகன்று மக்கள் அனைத்து வளங்களும் பெற அன்னை பராசக்தியை
பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பியுள்ள
வாழ்த்து செய்தியில் ‘‘அனைவரும் வணங்கிடும் ஆயுதபூஜையின் மிகப்பெரிய
வாழ்த்தாக மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் அனைவருக்கும் தொழில் வளம்
மூலம் வளம் பெருக, இந்த ஆயுத பூஜை வழிவகை செய்யட்டும் என்றும்
வாழ்த்துகிறேன். அனைவருக்கும் பா.ஜ.க. சார்பில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை,
விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள
வாழ்த்து செய்தியில், ‘‘ விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் போன்ற
புதியவைகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு
அளிக்கும் நன்நாள் ஆகும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் தொழிலுக்குரிய
உபகரணங்களை சுத்தம் செய்து வைத்து வணங்கி மகிழும் இந்நன்நாளில் தமிழக
மக்கள் எல்லா வளங்களையும் பெற்று தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும்
வெற்றி கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
ஏ.சி.சண்முகம்
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள
வாழ்த்து செய்தியில், ஆயுத பூஜை ஏற்ற தாழ்வுகளை போக்கும் சமத்துவ திருநாள்
ஆகும். முதலாளியும், தொழிலாளியும் ஒன்றுகூடி பூஜை செய்து மகிழ்ச்சியாக
இருக்கும் ஒரே திருநாள். விஜயதசமி தினத்தன்று வணிகர்கள் புது கணக்கு
தொடங்குவதும், குழந்தைகளை பள்ளிகளில் கல்வி பயில சேர்ப்பதும் இந்நாளுக்கு
உரிய சிறப்பு ஆகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜய
தசமி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
பாரி வேந்தர்–ஈ.ஆர்.ஈஸ்வரன்
இதேபோன்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரி வேந்தர்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல
மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத்
தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி
தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








