ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கை அமைக்க உலகம் முழுவதும்
தமிழர்களிடையே நிதி சேகரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என தமிழ் இருக்கை
அமைப்புக் குழுவைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:ஐ.நா. வெளியிட்ட அழிந்து வரும் மொழிகள் குறித்த ஆய்வறிக்கையில், தமிழும் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, உலகளவில் சங்கத் தமிழை நிலைநாட்டும் முயற்சியில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, முன்னணி கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழுக்குத் தனி இருக்கை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இதற்காக ரூ.40 கோடியை 2 ஆண்டுகளுக்கு பல்கலைக்கழகத்துக்கு அளிக்க வேண்டும்.இதற்காக
நானும், மருத்துவர் ஜானகிராமனும் இணைந்து, ரூ. 6.5 கோடியை வழங்கியுள்ளோம்.
மீதமுள்ள தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதையடுத்து, உலகளவில் சங்கத் தமிழை நிலைநாட்டும் முயற்சியில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, முன்னணி கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழுக்குத் தனி இருக்கை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு அடுத்ததாக, தமிழுக்குத் தனி இருக்கை அந்தஸ்து கிடைத்தால், தமிழின் பெருமை உலகளவில் சென்றடையும். தமிழைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்யவும் வழிவகை ஏற்படும்.
இதற்காக அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து நிதி திரட்ட உள்ளோம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நிதி திரட்ட திட்டமிட்டுளோம். தமிழை நேசிப்பவர்கள் நிதியுதவி அளிக்கலாம் என்றார் அவர்.







