வேளாண் துறையில் எதிர்வரும் சவால்களை சமாளிக்க வேளாண்மை பட்டதாரிகள் அதிகம்
வரவேண்டும். அவர்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது,” என
காரைக்குடியில் வேளாண்துறை அரசு இணை செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அவர்
பேசியதாவது:தகவல் தொழில் நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். 70
சதவீதம் பேர் விவசாய கிராமங்களில் வசிக்கின்றனர். 1950ல் நாட்டின் உணவு
உற்பத்தி 51 மில்லியன் டன்.
2011--12ல் 245 மில்லியன் டன்னாக
உயர்ந்தது. நாட்டில் 72 வேளாண் பல்கலைகழகம், 435 கல்லுாரிகள் உள்ளன.
தமிழகத்தில் 14 அரசு, 13 தனியார் கல்லுாரிகள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கம்
சீனாவை விட இந்தியாவில் அதிகரிப்பது கவலை அளிக்கிறது.2050ல் இந்திய மக்கள்
தொகை 150 கோடியாக அதிகரிக்கும். நிலத்தடி நீர் குறைகிறது. ஆனால் அதன்
பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளன. குறைவான நீரில் அதிக பலன்தரும்
விவசாயம் மேற்கொள்ள வேண்டும். உலக மயமாக்கலில் வேளாண்துறை சவால்களை
சந்திக்க வேளாண் பட்டதாரிகள் வரவு அவசியம். இவர்களுக்கு நல்ல எதிர்காலம்
உண்டு. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,அதிகாரிகளில் 10 சதவீதத்தினர் வேளாண்மை பட்டம்
பெற்றவர்கள் உள்ளனர், என்றார்.