ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் தன்னுடைய அயராத உழைப்பினாலும்,தீவிர முயற்சியாலும் இன்று அரசு கலைக் கல்லூரி பேராசிரியராக பணியேற்றார்.விழுப்புரம் மாவட்டம் பெரிய சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு.சு.சண்முகம் அவர்கள். இடைநிலை ஆசிரியராக தன்னுடைய பணியை தொடங்கி குதிரைச்சந்தல் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார்.தன்னுடை பணி எப்பொழுதும் ஆசிரியர் சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.ஆசிரியர்களின் நலனுக்காக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க விழுப்புரம் மாவட்டத்தின் தலைவராக செயல்பட்டு ஆசிரியர்களுக்கு பல சலுகைகளை பெற்று தந்ததில் இவர் பங்கும் உண்டு.ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று தன்னுடை தீவிர முயற்சியால் சென்ற ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியேற்றார்.தற்பொழுது சேலம் மாவட்டம் காட்டுக்கொட்டகை அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் மாணவர்களின் நலனுக்காக அயராது உழைத்தவர்.இன்றைய காலத்தில் ஆசிரியராக பணியேற்றார், ஆசிரியராக ஓய்வுபெற்றார் என்ற நிலையில் ஒரு ஆசிரியர் நினைத்தால் தன்னுடை தீவிர முயற்சியால் எந்த நிலையை வேண்டுமானலும் அடைய முடியும் என்பதற்கு இவர் போன்றோர்கள் உதாரணம் என்பதில் ஐயம் இல்லை..இவர் பணி சிறக்க கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.