இவர்களிடம் எழுத்து தேர்வில் காப்பி அடிப்பதற்காக நவீன கருவிகள் பொருத்தப்பட்ட உள்ளாடைகள் சிக்கின. இவைகளில், மிகச்சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்ட மொபைல் போன், புளூடூத், ரகசிய கேமிரா ஆகியவை அதிக தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம், தேர்வு எழுதுபவர்களுக்கு வெளியில் இருந்து தேர்வுக்கானப் பதில்கள் அனுப்பும் வகையிலும், தங்கள் வினாத்தாள்களை படம் எடுத்து வெளியில் அனுப்பும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முக்கிய குற்றவாளியாக ராஜஸ்தானின் ஜலோரில் ஜெக்தீஷ் பிஷ்னோய் என்பவர் சிக்கினார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியின் கிரீன்பார்க் பகுதியில் ‘ஸ்பை இந்தியா பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில் தனியார் உளவு நிறுவனம் நடத்தி வந்த அதன்இயக்குநர்களான வருண் வர்மா மற்றும் சதானந்த் சரோஜ் எனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், தேர்வில் காப்பி அடிக்க ஏதுவாகப் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்ட சுமார் 300 உடைகளையும் ராஜஸ்தான் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இந்தமோசடியில் தேர்வில் காப்பி அடிப்பதற்காக ஆணுக்கு மற்றும் பெண்ணுக்கு எனத் தனியாக உள்ளாடைகள் இரண்டு வகையாக தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த உடைகளை தேர்வு எழுதுபவர்மற்றும் அவருக்கு உதவுபவர் என இருவர் அணிந்து மோசடி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.