கருத்தரங்கு
சென்னை ஐகோர்ட்டில் ‘தி மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ என்ற வக்கீல் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில், ‘கல்வியில் 4 தூண்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பேசியதாவது:-
பெற்றோர் நிர்ப்பந்தம்
மேலும், இந்தியாவில் உள்ள உயர் கல்வி முறையில், ஒரு மாணவன் ஒரு பாடப்பிரிவில்தான் பட்டம் பெறமுடியும். ஆனால், வெளிநாடுகளில் ஒரு மாணவன் 2 பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, ஒரே நேரத்தில் படிக்க வசதி உள்ளது. அதனால், விரும்பும் பாடத்தை அந்த நாட்டில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்றனர்.
ஆனால், இந்தியாவில் பிள்ளைகள் எந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கவேண்டும் என்று பெற்றோர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனால், தான் விரும்பும் பாடத்தை படிக்க முடியாத நிலையில் தற்போதைய மாணவ சமுதாயம் உள்ளது. அதேபோல, கல்லூரியில் எந்த படிப்பில் இடம் கிடைக்கிறதோ? அதில் சேர்ந்து படிக்கும் பழக்கமும் மாணவர்களிடம் உள்ளது. இது சிறப்பான கல்வி முறையாக கருதமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
4 தூண்கள்
இந்த நிகழ்ச்சியில், பேசிய ராஜ்யசபா எம்.பி. கரண்சிங், ‘பல தரப்பட்ட விவரங்களை படிப்பது. படித்து தெரிந்துகொண்டதை வைத்து செயல்படுவது. கல்வி மூலம் ஒருமைப்பாட்டை வளர்த்து, அனைத்து தரப்பினருடன் ஒற்றுமையுடன் வாழ்வது. படித்ததை கொண்டு தன்னையே சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவது என்பதுதான் கல்வியில் 4 தூண்கள் ஆகும்’ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை, சங்கத்தின் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். செயலாளர் கேவிந்தராஜ் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், பி.ராஜேந்திரன், கே.கே.சசிதரன், எஸ்.வைத்தியநாதன், புஷ்பா சத்தியநாராயணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.








